Sunday, January 26, 2014

ஆத்துக்கு பக்கம் ஒரு தென்னம் பிள்ளை - பாதுகாப்பு - 1970

ஆத்துக்கு பக்கம் ஒரு தென்னம் பிள்ளை

படம்: பாதுகாப்பு
ஆண்டு: 1970
கண்ணதாசன்
சிவாஜி,

MSV, Siirgaazi

http://www.inbaminge.com/t/p/Paadhugaappu/Athukku%20Pakkam%20Oru%20Thennam%20Pillai.vid.html

ஹரி ஹரியோ

ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம்பிள்ளை
ஆஹா தென்னம்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை

தென்னை இளநீர் திரண்டது  போலே
பிள்ளை அழகும் இருந்ததனாலே
கண்கள் ஓடுது மேலே
எங்கோ ஏதோ சில
காணாத முத்துக்களைக் கண்டதாலே,
ஐயா!
காதலால் கொண்ட போதையாலே!

 ஹரி ஹரியோ

கெண்டை இரண்டைக் கண்டது நாரை
கண்டதும் மெதுவா ஊன்றுது காலை
அங்கே மீன்வரும் வேளை
ஏதோ ஏதோ ஒரு அச்சத்தில் விழுந்தது நாரை
அது ஆசையா? இல்லை,  அவசரத் தேவை.

ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம்பிள்ளை
ஆஹா தென்னம்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை

காலம் கடந்தும் மரத்துக்கு மோகம்
காதல் தண்ணீர் துடிக்கின்ற வேகம்
நீரைத் தேடுது வேரும்
அப்பா! அப்பப்பா!
அந்த நீராட வேருக்கு என்ன தாகம்
இங்கே பாடிய பாட்டுக்கு
மூன்று ராகம்.

ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம்பிள்ளை
ஆஹா தென்னம்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை






No comments:

Post a Comment