Wednesday, January 29, 2014

கன்னி நதியோரம் மின்னி விளையாடும் - நீர்க்குமிழி - 1965

கன்னி நதியோரம் மின்னி விளையாடும் - நீர்க்குமிழி - 1965


கன்னி நதியோரம்
மின்னி விளையாடும்
உன் அழகு மேனி
என்ன கதை கூறும்

வண்ண விழி மேடை
வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோடு டு டு
சேர்ந்து இசை பாடும்

கன்னங்கள் கோடி பெறுமோ
கைகளில் ஆடி வருமோ
கன்னங்கள் கோடி பெறுமோ
கைகளில் ஆடி வருமோ
எண்ணங்கள் பொங்கி வருமோ
இன்பத்தை பங்கு தருமோ

தானாக ஓடி வருமோ
தழுவாமல் ஆசை தீருமோ
நாணத்தை பெண்மை விடுமோ
நான் என்ன சொல்ல வேண்டுமோ

வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோடு டு டு
சேர்ந்து இசை பாடும்

முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ
சேர்ந்ததும் முடிவுரையோ

பெண்மேனி ஊஞ்சல் வேண்டுமோ
பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
பாலாற்றில் நீந்த வேண்டுமோ
பசியாறித் தூங்க வேண்டுமோ

கன்னி நதியோரம்
மின்னி விளையாடும்
உன் அழகு மேனி
என்ன கதை கூறும்

ng=ngk nj=njs ndh=wth dr=R ttr=RR tr=R ee=ii oo=uu

Tuesday, January 28, 2014

அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க - கல்யாணமாம் கல்யாணம் - 1974

அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க - கல்யாணமாம் கல்யாணம் - 1974

இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் - 1974

இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் - 1974

கண்ணதாசன்

Monday, January 27, 2014

வருவான் மோகன ரூபன் என - பொன்னூஞ்சல் - 1972

வருவான் மோகன ரூபன் என - பொன்னூஞ்சல் - 1972

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல 
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள 

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

காதல் நிலவு பாதி இரவு
மயக்கத்தில் ஆடும் உலகம்
கிள்ளை போல்பாட்டு
வெள்ளித் தேரோட்டு
மொட்டு வண்ணத் தென்றல்
என்னைத் தாலாட்டுது

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

வானம் திறந்து ஊர்வசி வந்தாள்
வளைத்துக்கொள் வாய்யா அழகி
பெண்ணுக்கோர் கீதம்
கண்ணுக்கோர் பாடம்
கட்டிக்கொண்டு மெல்ல மெல்ல 
சொன்னாலென்ன?

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல 
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள 

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்



Sunday, January 26, 2014

வரச் சொல்லடி... அவனை - பாதுகாப்பு - 1970

வரச் சொல்லடி... அவனை

படம் : பாதுகாப்பு
குரல் : பி. சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : ஜெயலலிதா
ராகம்  : சாருகேசி
 
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி... அந்தி மாலைதனில் 
அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாகத் தரவேண்டும்
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி....

தெய்வானை போல் என்னை நினைத்தாலென்ன - என்
செந்தூரம் கரைந்தோட அணைத்தாலென்ன
கையோடு கை கொஞ்சம் கலந்தாலென்ன - ஆ ஆ
கையோடு கை கொஞ்சம் கலந்தாலென்ன - நான்
கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன - நான்
கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன

வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி....
 
மலைக் கோவில் குமரேசன் அறியாததா - என்
மடி என்ன கதை சொல்லத் தெரியாததா
கலைக் கோயில் அவன் காண முடியாததா - அது
கனிவானதா கொஞ்சம் பதமானதா

வந்தானை.. சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
 
வந்தானை.. சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
 
பக்திச் சுவையுடன் தித்தித்தொரு இதழ்
முத்துத் தரும் என நின்றானை
வள்ளிக் குறமகள் அள்ளிப் பருகிட
பள்ளித் தலம் வரை சென்றானை

முருகனை குமரனை கந்தனை வேலனை
முருகனை குமரனை கந்தனை வேலனை
வசந்தம் நிறைந்து மயங்கும் இரவில்
மானிவள் ஆனந்த சாலைக்கு


வரச் சொல்லடி... 
என் வாயார ஒரு முத்தம் நானாகத் தரவேண்டும்
வரச் சொல்லடி... 
அவனை வரச் சொல்லடி....

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும் - பாதுகாப்பு - 1970

 

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்

படம்: பாதுகாப்பு
வரிகள்: கண்ணதாசன்
  
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ உறவோ

பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ வரவோ

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

மலரில் பனியிட்ட கலை
மஞ்சள் முகத்துக்கு திரை
பெண்ணில் நீ ஒரு சிலை
இன்று நான் அதன் விலை

கனியில் ஊறிய முகம்
கரும்பில் வாங்கிய ரசம்
ரதியை மீறிய சுகம்
இன்று நான் அதன் வசம

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

இறைவன் ஆலயமணி
இதுவும் தேவனின் பணி
அணிந்த மங்கல அணி
அன்பு இல்லறம் இனி

ஒன்று என்பது வரம்
இரண்டு என்பது மணம்
மூன்று என்பது குலம்
முடிவில்லாதது சுகம்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

நதியில் இருபக்கம் கரை
நடுவில் எழுவது அலை
அலையை மீறிய நடை
வாழ்க்கை தோணியின் கதை

முல்லை என்பது நிலை
குறிஞ்சி என்பது குணம்
மருதம் என்பது மணம்
வாழ்ந்து வளர்ப்பது இனம்

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ உறவோ

பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ வரவோ

ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்

ஆத்துக்கு பக்கம் ஒரு தென்னம் பிள்ளை - பாதுகாப்பு - 1970

ஆத்துக்கு பக்கம் ஒரு தென்னம் பிள்ளை

படம்: பாதுகாப்பு
ஆண்டு: 1970
கண்ணதாசன்
சிவாஜி,

MSV, Siirgaazi

http://www.inbaminge.com/t/p/Paadhugaappu/Athukku%20Pakkam%20Oru%20Thennam%20Pillai.vid.html

ஹரி ஹரியோ

ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம்பிள்ளை
ஆஹா தென்னம்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை

தென்னை இளநீர் திரண்டது  போலே
பிள்ளை அழகும் இருந்ததனாலே
கண்கள் ஓடுது மேலே
எங்கோ ஏதோ சில
காணாத முத்துக்களைக் கண்டதாலே,
ஐயா!
காதலால் கொண்ட போதையாலே!

 ஹரி ஹரியோ

கெண்டை இரண்டைக் கண்டது நாரை
கண்டதும் மெதுவா ஊன்றுது காலை
அங்கே மீன்வரும் வேளை
ஏதோ ஏதோ ஒரு அச்சத்தில் விழுந்தது நாரை
அது ஆசையா? இல்லை,  அவசரத் தேவை.

ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம்பிள்ளை
ஆஹா தென்னம்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை

காலம் கடந்தும் மரத்துக்கு மோகம்
காதல் தண்ணீர் துடிக்கின்ற வேகம்
நீரைத் தேடுது வேரும்
அப்பா! அப்பப்பா!
அந்த நீராட வேருக்கு என்ன தாகம்
இங்கே பாடிய பாட்டுக்கு
மூன்று ராகம்.

ஆத்துக்குப் பக்கம் ஒரு தென்னம்பிள்ளை
ஆஹா தென்னம்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை - அங்கே
காத்தாட வந்ததொரு சின்னப்பிள்ளை






ஜெயமோகனின் வெண்முரசு

ஜெயமோகனின் வெண்முரசு

http://jeyamohan.in

ஜெயமோகன் பணி வாழ்க. ஜெய்மோகன் வாழ்க.